தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆனிக்கொடை விழா மற்றும் கும்பாபிஷேகம் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் அதிக அளவில் சத்தத்துடன் இயக்கப்படுவதால் விளாத்திகுளம் பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவமனைகளுக்குச் செல்வோர், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தொந்தரவாக இருந்து வருகிறது. எனவே கோவில் திருவிழாக்கள் நடத்த அனுமதி கேட்டு வரும் கோவில் நிர்வாகத்தினரிடம் காவல்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கிகளை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தவில்லையா? அல்லது காவல்துறையினரின் அறிவுறுத்தல்களின் மீறி கோவில் நிர்வாகத்தினர் செயல்படுகின்றனரா?
எதுவாக இருப்பின் பாதிக்கப்படுவது பொதுமக்களே... ஆகையால் உடனடியாக காவல்துறை பொது மக்களுக்கு இடையூறு இன்றி ஒலிபெருக்கி அதை பயன்படுத்த கோவில் திருவிழாக்கள் நடத்தும் கோவில் நிர்வாகத்தினரிடம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.