மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பிரச்சனையின் உச்சகட்டமாக அங்குள்ள பெண்கள் மீது நடத்தப்பட்ட  அநாகரித்தைக் கண்டுகொள்ளாத அங்கு ஆளும் மாநில மற்றும் ஒன்றிய பாஜக அரசுகளைக் கண்டித்தும் மணிப்பூர் மாநில  பாஜக அரசை பதவி விலக வலியுருத்தியும் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக  கோவில்பட்டி பயணியர் விடுதி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கண்டன ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்புத் தலைவர் க.தமிழரசன் தலைமையிலும்,  செயலாளர்வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தை வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர் தொடங்கி வைத்து உரையாற்றினார், நாம் தமிழர் கட்சியின் தொகுதிச்செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கதிரேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தலைவர் அபிராமி முருகன், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்கத்தலைவர் மேரி ஷீலா, இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாவட்டத் துணைத்தலைவர் முனைவர். ஆ.சம்பத்குமார், அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் கருப்பசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார், பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத்தலைவர் சீனிராஜ், பகத்சிங் இரத்ததானக் கழகத்தின் தலைவர் காளிதாஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் லட்சுமணன், மக்கள் நீதிமையத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ், ஒய்எம்சிஏ தலைவர் ஆம்ஸ்ட்ராங், இந்திய தேசிய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவுத்தலைவர் அருள்தாஸ்,  பறையர் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் திரு தாவீது ராஜா, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி  கலைச்செல்வன், மந்தித்தோப்பு ஊழல் எதிர்ப்பு தலைவர் காந்திராஜன், கிப்ட் கன்ஸ்டரக்ஷன் டேவிட்சன், மலர்செல்வி, பொறியாளர் முருகேஷ்வரி,ரம்யா, ஜெஸ்மின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.