ஆடிப்பூரம் பவள நிறவல்லி அம்பாள் வளையல் காப்பு சுமங்கலி பூஜை ஊஞ்சல் உற்சவம் அம்பாள் வீதி உலா!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மாரியூர் அருள்தரும் ஸ்ரீ பவள நிற வல்லி அம்பாள் பூவேந்திய நாதர் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பவள நிற வல்லி அம்பாளுக்கு வளையல் காப்பு அலங்காரத்துடன் அம்பாள் பொன்னூஞ்சல் உற்சவம் சுமங்கலி பூஜை ஆலயம் வலம் சென்று வீதி உலா நடைபெற்றது முன்னதாக அம்பாளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது, இதில் மாரியூர் ,முந்தல், கடலாடி, சாயல்குடி ,கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து பெண்கள் பலர் கலந்து கொண்டனர்