தமிழக
மின்சாரத்துறையின் மின் மீட்டரை விற்கும் போலி மின்சார வாரிய ஊழியர் -
எட்டயபுரத்தில் பெண்ணிடம் மோசடி செய்தது அம்பலம்?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள எட்டயபுரம் கார்த்திகை வீதியில் சாத்தூரப்பன் என்பவரின் மகன் தனசேகரனக்கு சொந்தமாக ஒரே இடத்தில இரண்டு வீடுகள் உள்ளது. இந்த வீட்டை தனசேகரன் அழகுராதாகிருஷ்ணன், குணசுந்தரி(45) தம்பதியினருக்கு வாடகைக்கு வீட்டுள்ளார். மற்றொரு வீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. மேலும் வீட்டில் மின் வயர்கள் பொருத்தும் பணியும் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலையில் வீட்டில் வாடகைக்கு இருக்கும் அழகுராதாகிருஷ்ணன் மனைவி குணசுந்தரியிடம் (45) வெள்ளை நிற பேண்ட் சர்ட் அணிந்த குள்ளமான ஒருவர் எட்டயபுரம் மின்வாரியத்திலிருந்து வருவதாகவும் சாத்துரப்பன் பெயருக்கு புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பம செய்துள்ளார் எனவும் அதற்கு புதிய மின்அளவி மீட்டர் வந்துள்ளது. எனக்கூறி தான்கொண்டுவந்த ஒரு மின்அளவி மீட்டரை கொடுத்து விட்டு கட்டணமாக ரூ.5100 தேவை என கேட்டுள்ளார்.
இதனையடுத்து குணசுந்தரி மதுரையில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர் தனசேகரன் தாயார் ரத்தினம்மாளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மீட்டர் மாற்றுவது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏதும் விபரம் தெரியாத ரத்தினம்மாள் வீட்டில் குடியிருந்த வரும் குணசுந்தரியிடம் மின்வாரிய ஊழியருக்கு பணம் கொடுக்க கூறியுள்ளார். குணசுந்தரியும் போலி மின்ஊழியரிடம் 5500 கொடுத்துள்ளார். சில்லரை இல்லை என கூறி சில்லறை மாற்றி வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மின்ஊழியர் வராததால் இது குறித்து எட்டயபுரம் மின்அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். அனால் அலுவலகத்தில் இருந்து புதிய மின் மீட்டர் மாற்ற யாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலி மின் ஊழியரிடம் தான் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டது குணசுந்தரிக்கு தெரிந்தது.