
விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளனாதில் இளைஞர் காயம்?:வருடத்திற்கு 4 முறை காவல் நிலையம் வரும் மின்னல் வேக பேருந்து?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை சென்ற பேருந்து போது, பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மருதுபாண்டி (27) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மருதுபாண்டி படுகாயம் அடைந்தார்.படுகாயம் அடைந்த மருது பாண்டியை விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து, விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டி சேர்ந்த முத்துராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கிருஷ்ணன் என்கிற தனியார் பேருத்து, மின்னல் வேகத்தில் சென்று, அடிக்கடி விபத்து ஏற்பட்டு,கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இருவர் உயிரிழந்துள்ளனர், காவல் நிலையங்களில் 12க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அருப்புக்கோட்டையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இந்த தனியார் பேருந்து மின்னல் வேகத்தில் சென்று அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் உடனடியாக பேருந்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளாத்திகுளம் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.