தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த சகாயம் என்பவரின் மகன் பிரவீன் குமார் வயது (24) மற்றும் சங்கரலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த சேதுராஜ் என்பவரின் மகன்  இளவரசன்(19) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சூர்யா வயது 19 ஆகிய 3 பேரும் ஒரே  இருசக்கர வாகனத்தில் மது போதையில்  புதூரில் இருந்து நாகலாபுரம் வந்து கொண்டிருந்தபோது,சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையா மற்றும்  கருப்பசாமி ஆகியோர் வந்த  இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்,பிரவீன் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு   இடது கால் துண்டானது, மேலும் இளவரசு மற்றும் சூர்யா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு  மூன்று பேரையும் சங்கரலிங்காபுரம் காவல் நிலைய போலீசார்  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.