பாஜக மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,2017-ல் கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது. 2018-ல் மத்திய அரசு சார்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, தமிழகத்துக்கு 177 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என ஆணைய பிறப்பித்து, இரு மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசின் அனுமதியில்லாமல் காவிரி மேகதாதுவில் அணை கட்ட முடியாது என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் வெளிப்படையாக அறிவித்தார்.
2023-ல் காங்கிரஸ் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட போவதாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ள திமுகவின் முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழர்களை தொடர்ந்து வஞ்சிப்பது தமிழகத்தின் அரசாங்கம். 1970 ஆண்டுகளில் காவிரியில் 4 அணைகள் கட்டியபோது, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி எப்படி மவுனம் சாதித்தாரோ அதே போலவே இன்றைக்கு அவரது மகனும் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் கண் மூடி மவுனம் சாதித்து வருகிறார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது காவிரியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின்னர் காவிரியில் அணை கட்டும் பிரச்சினை எழுந்துள்ளது. இங்கே இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது, 40 கட்சி ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்காமல், முதல்வர் ஸ்டாலின் கர்நாடகா சென்றுள்ளார். அணை கட்டுவதால் தமிழகத்தின் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு கர்நாடகா போகலாமா?. அதனை புறக்கணித்திருக்க வேண்டும். தமிழர் மீதும், தமிழக விவசாயிகள் மீதும் அக்கறை இருக்கக்கூடிய முதல்வர் இதனை புறக்கணித்திருக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வந்துள்ளோம். அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதோ, தமிழக விவசாயிகளின் மீதோ அக்கறை கிடையாது. அவர்களின் சுயலாபத்துக்காக, தன்னுடைய குடும்ப நலனுக்காக தமிழக மக்களை ஏமாற்றும் வேலையை செய்வார்கள் என்பது தெரிகிறது. தமிழகத்தின் உள்ள அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு நிபந்தனைகளை விதித்து எந்த பெண்களுக்கு கிடைக்காத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்களை வாக்குறுதிகளை கொடுத்து, வெற்றி பெற்ற பின்னர் எந்த வாக்குறுதியில் நிறைவேற்றமாட்டார்கள். இதே போல் தான் டாஸ்மாக் கடையை மூடிவிடுவோம் என கூறினர். ஆனால், அதுகுறித்து தற்போதைய அமைச்சர் முத்துச்சாமி கூறுவது வியப்பாக உள்ளது. இவர்கள் வாக்குறுதிகளை அளிப்பார்கள் ஆனால் நிறைவேற்றமாட்டார்கள். மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது என்றார்.
தூத்துக்குடி
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்காது-பாஜக மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் பேட்டி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளம் அருகே வாகன விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயம்.
அடுத்த
விளாத்திகுளம் அருகே குடிநீர் பிரச்சினை : காட்சிப்பொருளாக இருக்கும் "குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்" : மக்களின் தாகம் தீர்க்குமா? மாவட்ட நிர்வாகம்!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026