கைரேகை பதிவு பெற்ற விற்பனையாளர் மூன்று மாத கால ரேஷன் விநியோகம் அனைத்தும் நிறுத்தம்.பயன் பெறாத ரேஷன் கார்டுகளை தேவையில்லை.சாலையில் தூக்கி வீசி கிராம மக்கள் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காணீக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக விற்பனையாளர் ஒச்ச தேவன் கோட்டை கிராமத்திற்கு பெண்கள் மூதாட்டிகளிடம் அனைவரிடமும் இயந்திரத்தில் கைரேகை பதிவேடுகளைமட்டும் பெற்று கொண்டு ரேஷன் வினியோகம் செய்துள்ளதாக தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பயன்பெறாத தங்களது ரேஷன் கார்டுகளை சாலையில் வீசி எரிந்து பயன்பெறாத ரேஷன் கார்டு வேண்டாம் வேண்டாம் ரேஷன் கார்டு வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி சாலையில் வீசி கிராம மக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.