தூத்துக்குடியில் உள்ள உலக புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு தேர் பவனியாக செல்லும் வீதிகளில் மாதா சப்பரப்பவனி; ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு!
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்ற பனிமய மாதா பேராலய தங்கத் தேர்வு விழா வருகிற ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி தங்க தேர் பவனி நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வார்கள். இதையொட்டி பனிமய மாதா பேராலயம் சார்பில் தங்கத்தேர் வீதி உலா நடைபெறும் வீதிகளில் மாதா சப்பர பவனி இன்று மாலை நடைபெற்றது.இந்த சப்பரபவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மாதாவின் இறையருள் பக்தி பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.பின்னர் மாதா சப்பர பவனி தங்கத்தேர் வீதி உலா நடைபெறும் வீதிகள் வழியாக சென்று பேராலயம் சென்றடைந்தது.