ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே சிறுகுடி கிராமத்திற்கு நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக வந்த அரசு பேருந்தை அக்கிராம  பெண்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் ,கனவுல கூட எங்க ஊருக்கு பஸ் வரும்னு நினைச்சு கூட பார்க்கல ஆனால் இப்ப அரசு பஸ் வந்திருச்சு அதனால முதலமைச்சர்  மு க ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி என அக்கிராம பெண்கள் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,  முன்னதாக அரசு பேருந்து ஓட்டுநர்களை வரவேற்கும் வகையில் பேருந்துக்கு குலவையிட்டு ஆரத்தி எடுத்து பேருந்துக்கு மாலை அணிவித்து  சக்கரத்திற்கு எலுமிச்சம் பழம் வைத்தும் கற்பூர சூடம் ஏந்தி திருஷ்டி பூசணியை உடைத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் கடலாடி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகவேல்  மாவட்ட போக்குவரத்து துறை அலுவலர் முதுகுளத்தூர் கிளை மேலாளர் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிஅலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துள்ளனர்.