கமுதி அருகே கிடாரிகுளம் கிராமத்தில் புரட்டாசி மாத பொங்கல் உற்சவவிழா!  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கிடாரிகுளம் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும்  அருள்மிகு ஸ்ரீ சித்திமுத்தி விநாயகர் பூரண புஷ்கல சமேத ஐயனார் தர்ம முனீஸ்வரர் பத்ரகாளியம்மன் பதினெட்டாம்படி கருப்பசாமி ஆலய சுவாமிகளுக்கு புரட்டாசி மாத பொங்கல் உற்சவ திருவிழாவை  முன்னிட்டு சுவாமிகளுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு பால்,தயிர்,மஞ்சள்,சந்தன,இளநீர்,பன்னீர்,பஞ்சாமிர்தம்,தேன் விபூதி 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.முன்னதாக கிடாரிகுளம் சித்திமுத்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து வான வேடிக்கை கொட்டு மேளம் இசை வாத்தியங்களுடன் அழகு வேல் எடுத்து கிடாரிகுளம் கிராம முக்கிய வீதிகளின் வழியாக நகர் வலம் சென்று முதுகுளத்தூர் சாலையில் அமைந்துள்ள தர்ம முனீஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். விழாவில் கிடாரிகுளம் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் சேகநாதபுரம், ,உலகநடை,உடையார்கூட்டம்,கோட்டைமேடு,கருங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.