மேலநம்பிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் : ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிரப்ப கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேல நம்ப விபரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6,7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலம் , கணிதம், அறிவியல் போன்ற முக்கிய பாடங்கள் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் இப்ப பாடங்களை படிப்பதில் மாணவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

இதனால் இன்று தங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் வகுப்பிற்கு வராமல் வகுப்புகளை புறக்கணித்து பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டனர். இதையறிந்த மாவட்ட கல்வி அலுவலர் சிவகுமார் உடனடியாக மேல நம்பிபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வருகை புரிந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று மாவட்ட கல்வி அலுவலர் உடனடியாக அருகில் உள்ள சிங்கிலிபட்டி அரசு பள்ளியிலிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த வீதத்தில் இப்படிக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் உடனடியாக நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதை அடுத்து மாவட்ட கல்வி அலுவலரின் வாக்குறுதியை தொடர்ந்து பெற்றோர்கள் நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.