"கர்ம வீரர்" காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு பனையூர் இந்து நாடார் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் இந்து நாடார் நடுநிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 121, வது பிறந்தநாள் விழாவை தமிழக அரசின் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் காமராஜரின் புகழ் எனும் தலைப்பில் பேச்சு போட்டி ,கட்டுரைப் போட்டி, நடனம், நாடகம் போன்றவை நடைபெற்றது.

மாணவர்கள் காமராஜரின் தோற்றத்தில் வேஷ்டி சட்டை ஆகியவை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சுந்தரவேல், பள்ளிச் செயலாளர் ஆதி மாரீஸ்வரன், கிராமத் தலைவர் வேல் முனியாண்டி பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தலைமை ஆசிரியர் மரிய அனிதா தலைமை வைத்து சிறப்புரையாற்றினார்.

ஆசிரியர் அற்புத சகாயராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்பு உரையாற்றினார். விழாவின் நிறைவாக ஆசிரியர் காந்தி கனி நன்றி கூறினார். நிர்வாகிகள் கோபால் , பாலமுருகன், செல்வகுமார், முத்துவேல் , தங்கமணி, இசக்கிமுத்து, பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.