கமுதி ஸ்ரீ ஆதி
வாராஹி அம்மனுக்கு ஆவணி மாத வளர் பிறை, பஞ்சமி, கருடபஞ்சமி
மற்றும் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.ராமநாதபுரம்
மாவட்டம் மதுரை சாலையில் சக்தி பாபா ஆலயத்தில் ஸ்ரீ ஆதிவாராஹி அம்மனுக்கு வளர் பிறை பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக
அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.
வளர் பிறை பஞ்சமி,
கருட பஞ்சமி மற்றும் நாக
பஞ்சமியை முன்னிட்டு ஆதி வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், குங்குமம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து
வாராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்,அம்மனுக்கு தீபாரதனை உள்ளிட்ட வழிபாடுகள்
நடைபெற்றது.
இதில் திரளான
பக்தர்கள் பங்கேற்று தங்களது பிரார்த்தனை நிறைவேற நெய் விளக்கேற்றி வழிபாடு
செய்தனர் . பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
வரங்களை அள்ளித்தரும் பஞ்சமி நாயகிகமுதி கமுதி ஸ்ரீ ஆதி வாராஹி அம்மன்!
Admin
1 நிமிட வாசிப்பு