விளாத்திகுளத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்ராஜி தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய கடம்பூர் ராஜி உதயநிதி ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லை, சனாதானத்தை பற்றி பேசி தற்போது வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார் என திமுக அரசை வசைபாடி ஒரு ஜோதிடர் போல கூறிவந்து நகைச்சுவை ஏற்படுத்தினார்.


இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனா தானா செல்ல பாண்டியன். விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், ஒன்றிய குழு தலைவர்கள் முனியசக்தி ராமச்சந்திரன், சுசீலா தனஞ்ஜெயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.