விளாத்திகுளம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 52 குடியிருப்புகளை முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து  மேயர், ஆட்சியர், எம்.எல்.ஏ ஆகியோர் குடியிருப்புகளுக்கான சாவியினை பயனாளிகளுக்கு வழங்கினார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 2.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 புதிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றதுவேலூர் மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்..இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிகூடுதல் ஆட்சியர்  தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை பார்வையிட்டு பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.