சாயல்குடியில் 108 கர்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவுகளுடன்
சமூக நலத்துறை சார்பில் வளைகாப்பு அர்ச்சதை-சீமந்த பொருட்களை
வழங்கிய நவாஸ் கனி M P! 
ராமநாதபுரம்
மாவட்டம் சாயல்குடியில் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 108 கர்ப்பிணி பெண்களுக்கு அறுசுவை உணவு
அளித்து சீமந்தம் தாம்பூல தட்டில்,வளையல், பழங்களை சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்
துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விநியோகித்து அட்சதை செய்து கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில்
பங்கேற்ற மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன்
மாவட்ட திட்ட அலுவலர் விஸ்வாபதி உள்ளிட்டோர் பலர் பங்கேற்று கர்ப்பிணி பெண்கள் மிக
கவனமாக இருக்க வேண்டும் அரசு மருத்துவமனை சிகிச்சைகளை பெற வேண்டும்
அங்கன்வாடி மையங்களில் சத்தான உணவுப் பொருட்களைப் பெற்று கொண்டு உடல்
பெற்று பயன்பெற வேண்டும் பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.கர்ப்பிணிப் பெண்களுக்கு அறுசுவை உணவுகளை பாராளுமன்ற உறுப்பினர் நமாஸ் கனி பரிமாறினார்.