போலியோ இல்லா சமுதாயம் தொடர,5 வயதுக்குட்பட்ட அனைத்து  குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து வழங்குங்கள் என்று பெற்றோர்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்த நிலையில், தமிழக முழுவதும் பேருந்து நிலையம் அங்கன்வாடி மையம், சத்துணவு மையம், ரயில் நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 43051 மையங்களில், 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து சிறப்பு  முகாமை 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில்  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்.