விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த நட்டார் - அய்யம்மாள் தம்பதியின் மகள் கேசவப்பிரியா. இவர் சாத்தூர் அருகிலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள தனியார் மதுரை CEOA பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கேசவ பிரியா மாநில அளவில் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். அதுமட்டுமின்றி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த பள்ளி மாணவிக்கு பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் சாதனை படைத்த பள்ளி மாணவி கேசவப்பிரியா பேசிய போது எதிர்காலத்தில் மருத்துவராக ஆக வேண்டும்... என்பதே தன்னுடைய இலட்சியம் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு
மதுரை CEOA பள்ளி மாணவி 10-ம் வகுப்பு தேர்வில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2வது இடம் பிடித்து சாதனை...!
Admin
1 நிமிட வாசிப்பு