தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 2024-ம் ஆண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் பயின்ற மாணவி காவியஜனனி 499/500 மார்க்குகள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.

மாணவி காவிய ஜனனி பெற்ற மதிப்பெண்கள் விபரம்;

தமிழ் 99/100

ஆங்கிலம் 100/100

கணிதம் 100/100

அறிவியல் 100/100

சமூக அறிவியல் 100/100

-என 500க்கு 499 மார்க் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், இராமநாதபுரம் திமுக மாவட்ட கழக செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் காவியஜனனி-யின் வெற்றியை பாராட்ட அவரது வீட்டிற்க்கே நேரடியாக சென்று மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கூறி தனது சொந்த நிதியில் மேற்படிப்புக்காக ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார். உடன் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் மோகன், மத்திய ஒன்றிய துணை செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன் ஆகியோர் மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.