புதூர்உதயா நகரில்,வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் உதயா நகர் பகுதியை சேர்ந்த ராஜாராம் என்பவரின் மனைவி இளங்கோ லட்சுமி (50),இளங்கோ லட்சுமி கணவர் ராஜாராமை 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து தனியாக புதூர் உதயா நகரில் இளங்கோ லட்சுமி  வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இளங்கோலட்சுமி விளாத்திகுளம் அருகே உள்ள  N.ஜெகவீரபுரம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இன்று வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது,

வீட்டின் கதவு உடைக்கப்பட்டுவீட்டின் பீரோவில் இருந்த கம்மல், மோதிரம், மூக்குத்தி உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும்  இரவில் வைத்திருந்த ரூபாய் 80 ஆயிரம் ரொக்க பணம்  திருடு போய் இருப்பதைக் கண்டு  இளங்கோ லட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

திருட்டு சம்பவம் குறித்து இளங்கோ லட்சுமி புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் பேரில்,புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.