தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக  சார்பில் பூத்தமிட்டி அமைக்கும் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.  இதில்   முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் பணியாற்றுவது குறித்தஆலோசனை வழங்கினார். மேலும் அவர் பேசும் போது எப்போது தேர்தல் நடந்தாலும் அடுத்த முதல்வர் எடப்பாடியார் தான் என்றார். தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக  வெற்றி பெற அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் சட்டமன்ற தேர்தலில் வெகு விரைவில் வர உள்ளது .எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் 200 தொகுதிகள் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடியார் தான் அடுத்த முதல்வராக வருவார். தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை வெல்வதற்கு நீங்கள் அனைவரும்  உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் அமைப்புச் செயலாளர் சின்னதுரை,  உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.