தூத்துக்குடியில் சுமார் 620 போலி சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்த தனியார் சிம்கார்டு டீலர்ஷிப் கடை உரிமையாளர் கைது - சைபர் குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை - பொதுமக்கள் ஜெராக்ஸ் எடுக்க செல்லும்போது கடைக்காரர்களுக்கு ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பும்போது பிரின்ட் எடுத்த பின்னர் அவர்களிடம் உள்ள தங்களின் விவரங்களை அழித்துவிட்டனரா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகொள்.மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் (DOT & TRAI) அளித்த அறிக்கையில் கடந்த 2021ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5000 சிம்கார்டுகள் போலியாக ஆக்டிவ் செய்யப்பட்டுள்ளதாக விபரங்கள் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த வினோதினி என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதுகுறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு. சஞ்சய்குமார் இ.கா.ப அவர்கள், சைபர்குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் திருமதி. தேவராணி, மாவட்ட காவல் கண்காணிப்பார் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோரின் உத்தரவின்படி தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. கோடிலிங்கம் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் ராயன் (38) என்பவர் வெங்கடேஸ்வரா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் சிம்கார்டு டீலர்ஷிப் கடை மூலம் சுமார் 620 போலியான சிம்கார்டுகளை ஆக்டிவேசன் செய்துள்ளார் என்பதும், கடைக்கு ஜெராக்ஸ் எடுக்கவரும் நபர்களின் ஆதார் விவரங்களை பயன்படுத்தி பல போலியான சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்துள்ளதும் தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி ராயன் என்பவரை இன்று கைது செய்து அவரிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் 3 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.மேலும் விசாரணை மேற்கொண்டதில், இதேபோன்று பல நபர்கள் செல்போன் டீலர்ஷிப் என்ற பெயரில் பொதுமக்களின் ஆதார் கார்டு மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்துள்ளதாகவும், பல சட்டவிரோத செயல்களுக்கு அந்த சிம்கார்டுகளை விற்பனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.மேற்படி போலி சிம்கார்டுகளை ஆக்டிவ் செய்த எதிரியை கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்த சைபர் குற்றப் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.மேலும் இதுகுறித்து மத்திய அரசின் https://tafcop.sancharsaathi.gov.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் செல்போன் எண்களை பதிவு செய்து, தங்கள் செல்போன் எண்களுடன் எத்தனை போலியான செல்போன் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கு தெரியாமல் கூடுதல் எண்கள் இணைக்கப்பட்டிருந்தால் அந்த இணையதளம் மூலமே உடனடியாக அந்த செல்போன் எண்களை செயலிழக்கச் செய்ய முடியும். மேலும் பொதுமக்கள் ஜெராக்ஸ் எடுக்க கடைகளுக்கு செல்லும்போது, கடைக்காரர்களுக்கு வாட்ஸ்அப் மூலமோ, இமெயில் மூலமோ ஆதார் கார்டு போன்ற விவரங்களை அனுப்பும்போது, பிரின்ட் எடுத்த பின்னர் அவர்களிடம் உள்ள தங்களின் ஆவணங்களை அழித்துவிட்டனரா என உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
போலி சிம் கார்டு விற்றவர் கைது
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாணவிக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது!
அடுத்த
200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி !
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026