கமுதி அருகே தில்லு மாவு படையல் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்-சிட்டாய் பறந்த காளைகள்! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காணிக்கூர் ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் பாதாள காளி அம்மனுக்கு தில்லு மாவு படையல் திருவிழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக,இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.மாட்டு வண்டி பந்தயத்தை காணிக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் செல்லப்பாண்டி கொடியை  அசைத்து துவக்கி வைத்து பரிசுகளை வழங்கினார்.இதில் பங்கேற்ற காளைகள் சிட்டுக்குருவி போல் சிட்டாய் பறந்து வெற்றி இலக்கு எல்கையை நோக்கி பறந்து சென்று பரிசுகளைப் பெற்றன. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை,சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிபந்தயத்தில் பங்கேற்றனர்இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற, மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காணிக்கூர் ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தினர் செய்தனர்.