தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் தங்கைக்காக பர்தா அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட அக்கா சுசிலாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஆன்லைன் டிரேடிங் மூலம் இழந்த பணத்தை மீட்பதற்காக அஸ்வினி என்ற பெண் தனது அக்கா சுசிலாவுடன் சேர்ந்து தனது மாமியார் வீட்டில் சுமார் 52 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதில் அஸ்வினி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் பர்தா அணிந்து கொள்ளையடித்த அக்கா சுசிலா தலைமறைவாக இருந்தார் தலைமறைவாக இருந்த சுசிலாவின் கணவர் காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் . இதைத்தொடர்ந்து காவல்துறை தேடுவதை அறிந்த காவலர் தனது மனைவி சுசிலாவை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .இதை தொடர்ந்து காவல்துறையினர் சுசிலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.