ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் ஆடிப்பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் விவசாயப் பணிகளுக்கு மழை பெய்து அதிக மகசூல் கிடைக்க வேண்டி வேப்பிலையை கையில் ஏந்தி சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.ஆடிப் பொங்கல் உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவங்கிய நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை  நடைபெற்றது .திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும் பொங்கல் வைத்தும் வானவேடிக்கை மேளதாளங்கள் முழங்க கரகம் எடுத்து சென்றும்  விவசாயப் பணிகளுக்கு  மழை பெய்து அதிக மகசூல் கிடைக்க வேண்டி கைகளில் வேப்பிலையை ஏந்தி சேத்தாண்டி வேடம் அணிந்து ஏராளமான பக்தர்கள்  வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.