மூவர்ண தேசியக் கொடிக்கு மலர் தூவி பெண்கள் குலவையிட்டு மரியாதை-வயலில் இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் இயற்கை விவசாயி ராமர் தனது விளை நிலத்தின் வயலில் மண்வெட்டியால் சுத்தம் செய்து வெண்டைக்காய் சாகுபடி செய்த வயலின் நடுவே கடப்பாரையால் துளையிட்டு கம்பத்தின் மீது மூவர்ண தேசிய கொடியை சக விவசாயிகளுடன் தேசிய கொடியை ஏற்றி மலர் தூவி மரியாதை செய்த விவசாயிகள் பெண்கள் குலவீட்டும் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தினர் பின்னர் அனைத்து விவசாயிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிகழ்வு அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இயற்கை விவசாயி ராமர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்த விவசாயிகளுக்கு பல்வேறு துறை அதிகாரிகள்  பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்,நாளை மாலை 3 மணிக்கு சென்னை கவர்னர் மாளிகையில் இயற்கை விவசாயி ராமர் உள்ளிட்ட தமிழக முழுவதும் உள்ள 30 விவசாயிகளுக்கு கவர்னர் விருந்தளித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.