கோவில்பட்டியில் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் - 4 நாட்கள் நடைபெறும் மத்திய அரசு சாதனை புகைப்பட கண்காட்சி தொடக்கம் - கிராமிய கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மஹால் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் சர்வதேச யோகா தினம் மற்றும் மத்திய அரசின் 9 ஆண்டுகால மக்கள் நலத்திட்டங்கள் , சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த நான்கு நாள் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியைமுன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்து புகைப்பட கண்காட்சி மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, இயற்கை வேளாண் மற்றும் சிறுதானிய வகைகள், தபால் துறை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டம், ஆதார் அட்டை எடுத்தல், சிறு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு, காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் இயற்கை மருத்துவம் குறித்த விளக்கம் மற்றும் சேவைகள், சுற்றுச்சூழல் வாழ்வியல் முறை , தனியா நிறுவனம் சார்பில் கோவில்பட்டி கடலை மிட்டாயின் பல்வேறு வகைகள் குறித்த விளக்கம் மற்றும் விற்பனை என உள்ளிட்ட அரங்குகளும், இடம்பெற்றுள்ளன .
இந்நிகழ்வில் மத்திய தகவல் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை அரசு அதிகாரிகள் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்...மேலும் தொடக்க விழாவினை முன்னிட்டு நடைபெற்ற நவதானியங்கள் விழிப்புணர்வு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.