விளாத்திகுளம் எஸ்.ஐ-க்கு பாராட்டு..."மாப்ள இவருதான்... ஆனா போட்ருக்குற சட்டை வாட்மேனோடது!" 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜலட்சுமி ஜூவல்லரியில் கடந்த மார்ச் 23ஆம் தேதி அன்று 109 கிராம் (13 பவுன்) தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ரூ. 12,500/- உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மாரிமுத்து மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் இரவு காவல் பணியில் இருந்த தனியார் கடையின் வாட்ச்மேன் ஒருவர் பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையில் விசாரணை மேற்கொண்டு இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்து திருடர்களை சிறையில் அடைத்தனர். எந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இந்த மெச்சத்தகுந்த பணிக்காக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. 


ஆனால், இந்த திருட்டை தடுத்து திருடர்களை சிறையில் அடைக்க பெரும் உதவியாக இருந்த தனியார் கடை திரு.வாட்ச்மேன் அவர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழோ அல்லது வெகுமதியோ ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்...!

(விளாத்திகுளம் அருகே வேடப்பட்டி வைப்பாற்றில் கடந்த ஜூன் 7-ம் தேதி அன்று கனரக வாகனங்களை கொண்டு ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை கிராம மக்களே தடுத்து திருட்டுக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சி மற்றும் டிப்பர் வாகனங்களை பறிமுதல் செய்து விளாத்திகுளம் ஆய்வாளர் வீரசோலை மற்றும் உதவி ஆய்வாளர் சுதாகர் அனைவரிடம் ஒப்படைத்து போலீசாரின் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்ட வாகனங்கள் எங்கே சென்றது என்பதையும் விளாத்திகுளம் போலீசார் கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மேலும் ஒரு பாராட்டுச் சான்றிதழ் வாங்க வாழ்த்துகிறோம்.)

அதுமட்டுமின்றி, 

• விளாத்திகுளம் கண்மாய்க்கரை அருகில் படுஜோராக நடக்கும் கஞ்சா விற்பனை!

• விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக அதிகாலையில் நடைபெறும் மது பாட்டில் விற்பனை!

• இதுவரை திருடர்களை கண்டுபிடிக்காமல் இருக்கும்... சுப்பிரமணியபுரம்: ஸ்ரீ வடக்குவா செல்லியம்மன் கோவில் நகை திருட்டு, அரியநாயகிபுரம்: அரியநாச்சி அம்மன் கோவிலில் திருட்டு, விளாத்திகுளம் பெருநாழி விலக்கு அருகே அரசியல் பிரமுகர் வீடு உட்பட பல வீடுகளில் திருட்டு... உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து திருடு போன பொருட்களை மீட்டு தந்து பல பாராட்டு சான்றிதழ் பெற வாழ்த்துக்கள்.

விளாத்திகுளத்தில் இனி திருட்டு நடக்காதோ? போலீசாரின் ஆக்சனை பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே...