வாழவந்தம்மன் அய்யனார் கோவில் 75 ம் ஆண்டு மாட்டு வண்டி பாரம்பரிய கலாச்சார முறையில்   புரவி எடுப்பு விழா சிம்லா கொட்டு மேலத்துடன்  கொண்டாட்டம்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காக்குடி கிராமத்தில் 75 ஆம் ஆண்டு பாரம்பரிய கலாச்சார முறையில் மாட்டு வண்டியில் புதிதாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அய்யனார் கருப்பசுவாமிகாளியம்மன் பேச்சியம்மன் தவழும் பிள்ளை  கை கால் பாதம் உருவ சுவாமிகளின் சிலைகளை சிம்லாக்கொட்டு மேல தாளம் இசை வாத்தியங்கள்வானவேடிக்கைகளுடன்  புரவி எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.வெற்றி விநாயகர் தர்ம முனீஸ்வரர் மந்தைப்பிடாரியம்மன் காளியம்மன் வாழவந்த அம்மன் அய்யனார் ஆலய புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு கமுதி கண்ணார் பட்டியில் இருந்து கடந்த 75 ஆண்டு கால பாரம்பரிய கலாச்சார முறையில் புரவி எடுப்பு விழாவிற்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் புதிதாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சுவாமி சிலைகளை தொன்று தொற்று ஒவ்வொரு ஆண்டும்  வழக்கமாக கொண்டு செல்லும் முறையை காக்குடி கிராம மக்கள்  கடைப்பிடித்து வருகின்றனர்.

என்னதான் உலகம மக்கள் விஞ்ஞானத்தை எதிர்நோக்கி சென்றாலும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இன்றளவும்  தங்களது வாழ்க்கை கலாச்சார நெறிமுறைகளை தொன்று தொட்டு  கடைப்பிடித்து வருவது  மிகவும் வியப்பாக பார்க்கப்படுகிறது.