ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெறிஞ்சிபட்டி கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற ஐந்து பசு மாடுகள் வயல்வெளியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக மாடுகள் உயிரிழந்தன,இறந்த மாடுகளை கண்டதும் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது புலம்பின மேலும்  4 பசுமாடுகள் மாயம்.போலீசார் மின்வாரியத்துறை அதிகாரிகள் விசாரணை?கமுதி அருகே உள்ள பறையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆறுமுகம் கருமலையான் வெள்ளைச்சாமி முனியசாமி ஆகியோரது பசுமாடுகள் மெய்சலுக்கு வயல் பகுதிகளுக்கு சென்ற நிலையில் மின்சாரம் பாய்ந்து தாக்கி பரிதாபமாக 5பசு மாடுகள் இறந்தன தங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்ந்த பசுமாடுகள் மின்சாரம் தாக்கி இறந்த தங்களது பசு மாடுகளை கண்டதும் பெண்கள் கண்ணீர் மல்க பரிதாபமாக அழுது புலம்பி தவித்தனர்.தங்களது மாடுகளை சிலர் மின்வாரியத் துறை அதிகாரியிடம் முறையாக அனுமதி பெறாமல் சட்டவிரோத செயலில் திட்டமிட்டு தங்களது பசு மாடுகள் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தும் மின்வாரியத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.