சுடலை மாடசாமி கொடை விழா பன்றிகளை பலியிட்டு சாமிக்கு படையல் பக்தர்களுக்கு சுடச்சுட 1001 கிலோ கம கம கறி விருந்து நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வெட்டுக்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துப்பேச்சி அம்மன் ஸ்ரீ சுடலை மாடசாமி காட்டேறும் பெருமாள் சுவாமி ஆலய புரட்டாசி மாத கொடை விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு பன்றிகளை பலியிட்டு 1001 கிலோ கம கம கறி விருந்து  பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.முன்னதாக காலையில் பக்தர்கள் கடற்கரை சென்று தீர்த்த குடங்களை கொண்டு சென்று முத்து பேச்சியம்மன் சுடலை மாடசாமி கட்டேறும் பெருமாள் சாமிகளுக்கு தீர்த்தக் குட புனித கும்பநீர், பால்,தயிர்,சந்தனம், மஞ்சள், இளநீர் பன்னீர்,விபூதி, பஞ்சாமிர்தம் 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு பன்றிகளை பலியிட்டு 1001 கிலோ பன்றிக்கறிகளை சமைத்து சுவாமிகளுக்கு படையலிட்டு பூஜை செய்துபக்தர்களுக்கு சுடச்சுட கமகம கறி அசைவ  விருந்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.இதில் வெட்டுகாடு கன்னிராஜபுரம் நரிப்பையூர்கடலாடி  சாயல்குடி, வேம்பார், நரிப்பையூர்,தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கொடை விழாவில் பங்கேற்று சுவாமிகளை வழிபாடு செய்து  அசைவ விருந்தில் பங்கேற்று சென்றனர்.