விளாத்திகுளம் அருகே புதூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை  விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது புதூர் பஜார் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் பொன்னையா என்பவரின் மகன் ராஜேந்திரன்(62) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது, பெட்டிக்கடையில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்ததுஇதனை அடுத்து புதூர்  காவல் நிலைய போலீசார் 49 ஆயிரம் மதிப்புள்ள 66 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.