தூத்துக்குடி பெரும் சர்ச்சைகளுக்கு இடைய  மூன்று திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு. 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்த திரைப்படம் படம் வெளியாவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா திரையரங்கம் கே எஸ் எஸ் திரையரங்கம் பிளாசா உள்ளிட்ட திரையரங்குகளில் இன்று மாமன்னன் திரைப்படம் வெளியானது ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தை பார்க்க வந்துள்ளனர் இந்நிலையில் சர்ச்சை காரணமாக திரையரங்குகளில் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.