தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 10 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்; தப்பியோடிய இருவரையும் தேடும் பணி தீவிரம்,தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுகள் மூலம் கடல் அட்டைகள், கஞ்சா, புகையிலைப் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படும் விரலி மஞ்சள், பீடி இலைகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் (28.06.2023) இன்று நள்ளிரவு 3 மணியளவில் சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக வந்த லோடு வேன் (Bolero pickup) வாகனத்தை நிறுத்தபோது வாகனம் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. பின்னர், போலீசார் விரைந்து சென்று தருவைகுளம் ECR சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது டிரைவர் மற்றும் மற்றொருவர் காட்டுப் பகுதியில் தப்பி ஓடியுள்ளனர்.மேற்படி வாகனத்தை சோதனை செய்ததில் 40  மூட்டைகளில் 1,200 கிலோ பீடி பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். பின்னர், வாகனத்தை போலீசார் கைப்பற்றி சிப்காட் காவல் நிலையம் கொண்டுவந்து, கைப்பற்றிய பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.