விளாத்திகுளம் அருகே கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டி
நடைபெற்றது, இப்போட்டியினை
கல்லூரி செயலர் அருட்தந்தை. விக்டர் அந்தோணி ராஜ், கல்லூரி முதல்வர் முனைவர். திலகா மற்றும்
அருட்தந்தை. பீட்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இப்போட்டிகளில்
தூத்துக்குடி, கோவில்பட்டி, கீழ ஈரால், கீழ முடிமண், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து 15
பள்ளி அணிகள் கலந்து கொண்டனர்.
முதல் பரிசினை
காயல்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றனர்.முதல் பரிசாக
3000 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது,இரண்டாவது
பரிசினை தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றனர்.இரண்டாவது பரிசாக
2000 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.மூன்றாவது
பரிசினை சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றனர். மூன்றாவது பரிசாக ஆயிரம்
ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகச் செயலாளர் குரு சித்திரசண்முகபாரதி மற்றும் நாகலாபுரம் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்ட்ரின்
ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இப்போட்டிகளில் அருட்தந்தையர்கள் அலெக்ஸ் அந்தோணிசாமி அல்போன்ஸ் லாசர் மற்றும் பேராசிரியர்கள்
கலந்து கொண்டனர் இப்போட்டிகளை அருட்தந்தை. தாமஸ் மற்றும் கல்லூரி உடற்கல்வி
இயக்குனர் பாண்டிதுரை மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
விளையாட்டு
தொன் போஸ்கோ கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டி!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விடியல் ஆட்சியில் விவசாயிகளுக்கு விடியல் பிறக்குமா?
அடுத்த
ஆழ்கடலில் மீன் பிடிக்க திரேஸ்புரம் நாட்டுப்படகு மீனவர்கள் எதிர்ப்பு?
இதையும் படிக்கலாம்
நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா!
25 Apr 2025
இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
21 Feb 2025
புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
06 Nov 2024
படர்ந்தபுளியில் மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி!
06 May 2024