ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே  மங்கலம் கிராமத்தில் அருள்மிகு வில்வ ஜோதி கிருஷ்ணம்மாள் ஆலய இரண்டாம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு, பெண்கள் 108 பால்குடங்களை கொண்டு சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

மங்களம் கிராமத்தில் விநாயகர் ஆலயத்தில் இருந்து 108 பால்குடன்களை பெண்கள் வானவேடிக்கை மேளதாளம் இசை வாத்தியங்களுடன் கிராம வலம் சென்று வில்வ ஜோதி கிருஷ்ணம்மாள் ஆலயம் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம், தயிர், சந்தனம் ,இளநீர், பன்னீர் ,பஞ்சாமிர்தம் ,விபூதி ,கும்பநீர் அபிஷேகம்  மூலிகை  வாசனை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாரனை நடைபெற்றது.முன்னதாக யாக சாலை பூஜை கணபதி ஹோமம் கோ பூஜை  பூர்ணா குதி தீபாதாரணை  நடைபெற்று யாகசாலை பூசையில் இருந்து கும்பநீர்  ஆலய வலம்  புறப்பாடு சென்று அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.