ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே மங்கலம் கிராமத்தில் ரேணுகாம்பாள் ஆதி சிவன் சோமேஸ்வரர் ஆலய 8ம் ஆண்டு வருட அபிஷேக விழா இரட்டை மாட்டு வண்டி  பந்தயம் நடைபெற்றது, இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துபங்கேற்ற காளைகள் வெற்றி இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றன.மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி சிவகங்கை விருதுநகர் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இதில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டு வண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம் குத்துவிளக்கு பரிசாக வழங்கபட்டது.இந்த கடுமையான மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்து சென்றனர்.