கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் அன்னதான நிகழ்ச்சி!
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளையின் சார்பில் மாதம்தோறும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது .அதே போல் 21 மாத அன்னதான நிகழ்ச்சி, உலக மக்கள் நலன் வேண்டி கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் காளியம்மன் திருக்கோவில் முன்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னதாக உலக மக்கள் நலன் வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் தொழிலதிபர் ராஜா என்ற விஜி தலைமை வகித்தார். நகர் மன்ற உறுப்பினர் லவ ராஜாவரவேற்புரை நிகழ்த்தினார். ஆசிரியர் ஜீவானந்தம் , கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அருண் பேக்கரி உரிமையாளர் மாடசாமி, ஸ்ரீ விக்னேஸ்வரி என்டர்பிரைசஸ் அசோக், ஜீவா அனுக்கிரக பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் . கோவில்பட்டி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகத்தியன், மயக்கவியல் மருத்துவர் சுகன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் , தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி , பொருளாளர் கார்த்திகேயன் , செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன் ,தங்கராஜ் ,மாரிமுத்து ,சண்முகசுந்தரம் ,செல்வம், சுப்பிரமணியன், முத்து மாரியப்பன்,எஸ் பி பாண்டியன் , காளிராஜ், பாலமுருகன், கதிரேசன், சாரதி மெடிக்கல் உரிமையாளர் சந்திர கண்ணன், பசுமை இயக்கத்தைச் சேர்ந்த செந்தில், தொழிலதிபர் சேகர் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்