கழுகுமலை பேரூராட்சி பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி - காலிகுடங்களுடன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் ...
ஆர்ப்பாட்ட முடிவில் காலிக்குடங்களுடன் வந்த பெண்களுக்கு குடிநீர் வழங்கிய அதிமுகவினர்,கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சி உட்பட்ட 15 வார்டுகளில் கடந்த ஒரு மாதகாலமாக முறையாக குடிநீர் வழங்கப்படமால் இருப்பதை கண்டித்து தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ,கழுகுமலை பேரூராட்சி நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் கழுகுமலை காந்தி மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.இதில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் , அதிமுகவினர் காலி குடங்களுடன் கலந்து கொண்டு முறையாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் போராட்டத்தில் காலிக் குடங்களுடன் கலந்து கொண்ட பெண்களுக்கு அதிமுகவினர் தனியார் குடிநீர் வாகனம் மூலமாக குடிநீர் விநியோகம் செய்தனர். குடிநீர் வரவில்லை என்று போராட்டத்துக்கு வந்த பெண்கள் , கடைசியில் ஒரு குடம் குடிநீருடன் வீட்டுக்கு சென்றனர்.