தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தில் நகராட்சி சார்பில் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது,
மேலும் ஆக்கிரமிப்பு அகற்றிய பின்னர் அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அவதிப்பட்டு வரும் நிலை உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கிராமம் பகுதியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர்.செராஜூ நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும், மக்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.