ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி சுயம்புலிங்க நகரில் அமைந்துள்ள சாயல்குடி பூவன்  நாடார் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சாஸ்தா செம்புலிங்க அய்யனார் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சாஸ்தா ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோயில் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 29 ம் தேதி கொடியேற்றம்  காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்று வந்தது இதில் காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள்  வந்தனர்.இதனை அடுத்து கடந்த  வெள்ளிக்கிழமை அன்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று  செவ்வாய்க்கிழமை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து செண்டை மேளம் இசைத்தவாறு வான வேடிக்கையுடன் பால்குடம் ஊர்வலம் வந்து முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து ஆலயத்தை வந்தடைந்தனர்.பால்குடம் எடுத்த பக்தர்கள் மூலவர் அருள்மிகு சுயம்புலிங்க சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனையடுத்து பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு திபாராதனை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சாயல்குடி பகுதியை சேர்ந்தசுற்று வட்டார  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுயம்புலிங்க சுவாமி அருளாட்சி பிரசாதம் பெற்று சென்றனர்.