"கிருஷ்ண ஜெயந்தியை" முன்னிட்டு,விளாத்திகுளத்தில் மாறுவேடம் அணிந்து குழந்தைகள் ஊர்வலம் : கோ பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு!
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு பகுதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் - ராதை வேடமிட்டு பெற்றோர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து பேருந்து நிலையம் முன்பு விஷ்வ பரிஷத் அமைப்பினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் சிலைக்கு தீபாரதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின் அங்கிருந்த கன்றுடன் கூடிய பசுவிற்கு வேஷ்டி, மாலையணிவித்து குங்குமமிட்டு கோ பூஜை நடைபெறுகிறது. இதில் பேருந்து நிலையம் முன்பு கூடியிருந்த மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மேலும் கிருஷ்ணர் - ராதை போன்று மாறுவேடம் அணிந்து வந்த குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்தியா
"கிருஷ்ண ஜெயந்தியை" மாறுவேடம் அணிந்து குழந்தைகள் ஊர்வலம் : கோ பூஜை நடத்தி சிறப்பு வழிபாடு!
Admin
1 நிமிட வாசிப்பு