தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம்!இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு  பல்வேறு பகுதிகளில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி பங்களா தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோகுல கிருஷ்ணன் ஆலயம். இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விரதமிருந்த  பெண்கள் குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊரடமாக வைகுண்டபதி பெருமாள் ஆலயத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டு பின்னர் கோகுல கிருஷ்ணன் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர் பின்னர் அங்கு கிரிஷ்ன பகவானுக்கு கிருஷ்ண பகவானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது