தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் அமைந்துள்ள திருக்கோவிலுக்கு இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன்படி, இத்திருக்கோவிலில் அதிகாலை 5 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, நாடி சந்தனம், பிம்ப ரக்ஷபந்தனம், மூலிகை திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹீதி, வேதிகா அர்ச்சனை,யாத்ரா தானம், கோ பூஜை, யாக சாலை ப்ரவேஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் மகா கும்பாபிஷேக விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பால், இளநீர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் மார்த்தாண்டம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர்.