தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் "குருவார பிரதோஷ தினத்தை" முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அருகம்புல், எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை உள்ளிட்ட மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.


(நந்திகேஸ்வரர்)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து செல்வர். அதிலும் பிரதோஷம் போன்ற முக்கிய தினங்களில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், வைகாசி மாத குரு வாரப் பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அருகம்புல், எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை உள்ளிட்ட மாலைகள் சாற்றப்பட்டு நன்கு அலங்கரிக்கப்பட்டுப்பின் பஞ்சமுக சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில்  பிரசாதங்கள் வழங்கப்பட்டது.