தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ வரத விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
தூத்துக்குடியில் இரண்டாம் கேட் ரயில்வே பகுதியில் இருந்த பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயில் இரட்டை ரயில் பாதை போடப்பட்டதன் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோவில் தெரு பகுதியில் புதிதாக ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயில் கட்டபட்டு ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 6:00 மணி முதல் 645 மணி வரை நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம் யாக சாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைக்குப் பின்பு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்து ஸ்ரீ வரத விநாயகரை வழிபட்டு சென்றனர்.