மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழல்காற்றானது 45-முதல் 55-கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருதால் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழல்காற்று 45-முதல் 55-கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருவதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை இதனால் 250க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மற்றும் 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.