சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் சௌந்தரபாண்டிய விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது! 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்தரபாண்டிய விநாயகர் திருக்கோவிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சௌந்திர பாண்டிய விநாயகருக்கு பால், பன்னீர், தேன்,  சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம்  நடைபெற்றது.

அபிஷேகம் முடிந்த பின்  மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கபட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.