
கோட்டநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே கோவில் பிரச்சனை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனியசாமி கோவில் கொடை விழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே உள்ள பிரச்சனை தொடர்பாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், இருதரப்பினரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
• இக்கூட்டத்தின் முடிவில்... ஒரு தரப்பினர் இத்திருக்கோவில் தங்களது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளதால், வழக்கின் தீர்ப்பு வரும் கோவிலில் கொடை விழா நடத்த அனுமதி இல்லை என்றும், மேலும் கோட்டநத்தம் அருள்மிகு ஸ்ரீ முனியசாமி கோவிலானது... இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாலும், இரு தரப்பினரின் கருத்துக்கள் வெவ்வேறாக இருந்த காரணத்தினாலும் இருதரப்பினரும் ஒருங்கிணைந்து 5 நபர்கள் வீதம் பொறுப்பாளர்களை தேர்வு செய்து கொடை விழா நடத்த ஏற்பாடு செய்யலாம் எனவும், சம்மதம் இல்லாத பட்சத்தில் இரண்டு தரப்பினரும் வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக கொடை விழா நடத்திக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
• அதேபோன்று இந்து சமய அறநிலை துறை மூலம் 09/06/2023 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுவான பூசாரி நியமனம் செய்து எளிமையான முறையில் வழிபாட்டு நடைபெறும் என்றும்
• திருக்கோவில் வளாகம் மற்றும் திருக்கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் கிடாய் வெட்டுதல், மேளம் அடித்தல், பால்குடம் எடுத்தல், அன்னதானம் போன்றவை அனுமதி இல்லை என்றும்
• இவ்வாறு சிறப்பு வழிபாடு நடைபெறும் பொழுது இருதரப்பினரும் எவ்வித இடையூறும் இன்றி ஒற்றுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.